Published on 23/11/2020 | Edited on 23/11/2020

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறிப்பாக புயலினால் எப்போதும் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் 6 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.