பேராசிரியை நிர்மலா தேவிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றது. நிர்மலா தேவிக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
நிர்மலா தேவிக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20-ந்தேதி முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று 3-வது நாளாக விசாரணை தொடர்கிறது.
விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்தே போலீசார் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரையில் அவர் வெளியில் எங்கும் அழைத்துச் செல்லப்படவில்லை.
இந்நிலையில், இன்று நிர்மலா தேவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.