Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சியா?

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

தமிழகத்தில் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் தருமபுரி,தேனி, திருவள்ளூர், கடலூர் உட்பட 5 மக்களவை தொகுதிகளில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19ஆம் தேதிமறுவாக்கு பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று அறிவித்தது. இந்த நிலையில் மதுரை, தேனியைப் போல தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்களை மாற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அந்த குற்றச்சாட்டுக்களை உண்மையாக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளும், கலெக்டரும் மாறி, மாறி கருத்துக்களை கூறிவருகின்றனர். இது இன்னும் அதிக சந்தேகத்தை உண்டாக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் ஓட்டுமொத்தமாக குற்றம்சாட்டியுள்ளன.
 

evm



தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த தேர்தலின்போது தர்மபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும், திருவள்ளூரில் ஓட்டுக்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக ஓட்டுக்கள் பதிவானதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மறு தேர்தல் நடத்தும்படி திமுக கோரிக்கை விடுத்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ கூறியிருந்தார். இதனால் அங்கு மறு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பாக பல்வேறு கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு வெளியே சீல் வைக்கப்பட்டன. துப்பாக்கிய ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. 

இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்த விட்ட நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஓட்டுப்பதிவான இயந்திரங்களை மாற்றிவிட்டு, இவற்றை வைக்கப்போவதாக தகவல் பரவியது. தேனி மக்களவை மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவில் அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற ஆளும் கட்சியினர் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின.இதனால் வாக்கு பதிவு எந்திரங்கள் மாற்ற முயற்சி ஏதும் நடக்கிறதா என்ற சந்தேகங்களை எதிர்கட்சிகள் எழுப்பிவருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்