காவிரியில் மணல் தொடர்ந்து எடுத்ததால் மணல் எடுக்க அதிக தூரம் எடுக்க வேண்டி உள்ளதால் மணல் கொள்ளையர்கள் கவனம் தற்போது ஊருக்குள் ஓடும் ஆறுகளின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.தற்போது ஆளும் கட்சியின் பெயரை சொல்லி திருச்சி மாநகர் அருகே உள்ள கோரையற்றில் மணல் தொடர்ச்சியாக எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் காவிரியில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சில இடங்களில் தடை நீக்கப்பட்ட பின்னர் அரசே மணல் குவாரிகளை நடத்துவதுடன் ஆன்லைன் மூலம் மணல் விற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக டிஜிபி பொறுப்பேற்ற திருபாதி திருச்சிக்கு விசிட் வந்த போது மணல் கொள்ளை தடுக்கப்படும். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிது நடவடிக்கை எடக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் திருச்சி மேலபஞ்சப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் திருட்டு நடப்பதாக எபுதூர் போலீசாருக்கு நள்ளிரவு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில் கன்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் எடமலைப்பட்டி புதூர் இன்ஸ் நிக்ஸன் மற்றும் போலிஸ் துணையோடு அப்பகுதியில் இரவு முழுவதும் மறைந்திருந்து அதிகாலை அப்பகுதியில் திடீரென தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது டிப்பர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து 9 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய 2 டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரம், 2 பைக், 3 ரூ.1.28 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் கள்ளிக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பாலு (எ) பாலசுப்ரமணியன் என்பதும், இவரது தலைமையில் மணல் அள்ளியதும் தெரியவந்தது.
இவரிடம் நடத்திய விசாரணையில் ஆளுங்கட்சி முக்கிய புள்ளி ஒருவரின் பின்புலத்தில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதுவரை எவ்வளவு யூனிட் மணல் கடத்தி உள்ளனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் விற்ற பணம் 1.28 லட்சம் ரகசிய தகவலையடுத்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை மறைந்திருந்த போலீசார், திடீரென மணல் அள்ளும் இடத்திற்கு சென்று சுற்றி வளைத்தனர்.
வாகனங்களை பறிமுதல் செய்த நிலையில் நள்ளிரவு 3 லோடு மணல் திருடி விற்று வைத்திருந்த ரூ.1.28 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். ஒரு லோடு மணல் ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.