தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது,
சம்பவம் நடந்த அன்று நான் கேகே நகரில் ஷீட்டிங் முடித்துவிட்டு நான் ஆட்டோவில் கிளம்பினேன். இவன் ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு வண்டியில வரான். நான் அங்கிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் என்னுடைய அசிஸ்டென்ட் போன் பண்ணி, மேடம் இங்க ஒருத்தர் தீக்குளிச்சிட்டார் என தெரிவித்தார்.
எனக்கு ஒரு டவுட் வந்தது. நேரா கிளம்பி கேகே நகர் போலீஸ் ஸ்டேசனில் போய் விசாரித்தேன். யார் தற்கொலை பண்ணியதுன்னு. காந்தி லலித்குமார் என்று சொன்னாங்க. எங்க கொண்டு போயிருங்காங்கன்னு கேட்டு அங்கேயும் போய் பார்த்தேன். அவன் எதிரியாகவே இருக்கட்டும். எனக்காக போயிருக்குன்னு நான் பீல் பண்ணினேன். ஆஸ்பத்திரியில் போய் இருந்தேன். அவன எப்படியாவது காப்பாத்துங்கன்னு. ஆனா அங்க இருக்கிறவங்க, நீங்க இங்க இருந்தால் உங்கள அடிச்சுருவாங்க, கொன்னுருவாங்க நீங்க கிளம்புங்கன்னு சொன்னதால அங்கிருந்து வந்துட்டேன். மற்றப்படி நான் தலைமறைவாகவில்லை. இதில் என் தப்பு என்ன இருக்கிறது.
காந்தி லலித்குமார் சகோதரர் உங்களை குற்றம் சாட்டுகிறாரே. நீங்க ஏமாற்றிவிட்டதாக கூறுகிறாரே
நான் எந்த வகையில் ஏமாற்றினேன். அவரோட சகோதரர், சகோதரிக்கு தெரியும் அவரால் நான் எப்படிப்பட்ட சித்ரவதையை அனுபவித்தேன் என்று. நான் எந்த வகையில் பொறுப்பு என்று எனக்கு தெரியவில்லை.
உங்களிடம் இருந்து அவர் பணம் வாங்கியிருக்கிறாரா இல்லை நீங்க அவரிடம் பணம் வாங்கியிருக்கிறீர்களா
அப்படி எதுவும் இல்லை. செலவுக்கு பணம் கொடுப்பேன். அவ்வளவுதான். மற்றப் பெண்களிடம் நிறைய ஏமாற்றியிருக்கிறார். என்னிடம் உண்மையை லவ் பண்றதா சொல்லியிருக்கிறார். எனக்கு லவ்வும் வேணாம். இன்னொரு கல்யாணமும் வேணாமுன்னு நான் தெளிவாக இருந்தேன்.
எப்படி அறிமுகமானார்
சினிமா மூலமாகத்தான். நிறைய டைரக்டரிடம் போட்டோஸ் கொடுப்பதாக கூறி அறிமுகமானார். போக போக நல்லா பழகினோம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பொம்பள பொறுக்கி என்று தெரிந்து இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் நான் எப்படி அவனிடம் பழகுவது. என்னை ரொம்ப கேவலமா சோஷியல் மீடியாவில் போடுறாங்க. அபிராமியோட என்னை கம்பேர் பண்றாங்க... என கண்ணீரோடு கூறினார்.