
தமிழக வணிகவரித்துறையில் புதிய சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வணிகவரித்துறையில் பணியாற்றும் உதவி கமிஷனர், துணை கமிஷனர், கூடுதல் கமிஷனர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, சீனியாரிட்டி பட்டியல் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது. இதை எதிர்த்து, வணிகவரித்துறை அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், டிவிஷன் பெஞ்சில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஏபி ஹாகி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தார்கள். வணிகவரித்துறை அதிகாரிகள் சார்பாக, வழக்கறிஞர் எம் ரவி ஆஜராகி, ‘சீனியாரிட்டி அடிப்படையில் திருத்தம் செய்து, புதிய சீனியாரிட்டி பட்டியலைத் தயாரித்து, அதன் அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. தமிழக அரசு இதுவரை பின்பற்றவில்லை. எனவே, தற்போதுள்ள சினியாரிட்டி பட்டியலில் திருத்தம் செய்து, புதிய பட்டியலைத் தயாரித்து, அதன் அடிப்படையில் பதவி வழங்கவேண்டும்.’ என்று வாதாடினார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், தற்போது உள்ள சீனியாரிட்டி பட்டியலில் திருத்தம் செய்து, புதிய சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து, அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் பதவியிலிருந்து துணை கமிஷனர், துணை கமிஷனர் பதவியிலிருந்து கூடுதல் கமிஷனர் ஆகிய பதவிகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.