சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ரூ. 20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள கிளாம்பாக்கத்தில் 59.8 ஏக்கர் பரப்பளவில் 393 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து முனையத்திற்குச் சுலபமாக சென்று வருவதற்காக புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், தெற்கு ரயில்வேக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் தான் கிளாம்பாக்கத்தில் ரூ. 20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடை கொண்ட ரயில் நிலையப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.