கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் வேலுச்சாமியும் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவில் ஜோதி மணி உள்பட சிலர் போட்டி போட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் நடைபெற்ற 8 பாராளுமன்ற தொகுதிகளில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி அதிக ஓட்டுகள் பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.
கழகத் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான கொரடா சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் உள்பட தேர்தல் பணியாற்றியதன் மூலமே தான் வேலுச்சாமியும் அதிக ஓட்டுகள் வாங்க முடிந்தது.
அதைக்கண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஐ.பி.யை பாராட்டினார். அதுபோல் வேலுச்சாமி யையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்த நிலையில்தான் டெல்லி சென்று பதவியேற்ற வேலுச்சாமி அடுத்த ஒரு வாரத்திலேயே டெல்லியில் உள்ள ரயில்வே அதிகாரிகள் சந்தித்து மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜா எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில் திண்டுகளில் நிறுத்த வேண்டும் என்றும் அது போல் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் அதிவிரைவு வண்டி ஒட்டன்சத்திரத்தில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தார்.
இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குறுதியில் "நான் வெற்றி பெற்றால் திண்டுக்கலில் அலுவலகம் அமைத்து இரவு பகல் பாராமல் உங்களுடைய கோரிக்கைகளையும் குறைகளையும் தீர்த்து வைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார்". அதன் அடிப்படையில் திண்டுக்கல்லில் உள்ள பாண்டிய நகரில் எம்பி அலுவலகம் அமைக்க ஒரு பங்களா வீட்டை தேர்வு செய்தார். இப்படி தேர்வு செய்யப்பட்ட எம்பி அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான ஐ பெரியசாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்ததார்.
இந்த எம்பி அலுவலகம் திறப்பு விழாவில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான கொறடா சக்கரபாணி கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜ் தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் உள்பட நகர ஒன்றிய கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.