ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளது. காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்வதும், அவற்றை இறைச்சியாக உண்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளது.
இப்படி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தை மற்றும் புலி உள்ளிட்ட விலங்குகளை பிடிக்க எந்த கூண்டு வைத்தாலும், அந்த கூண்டில் சிக்காமல் உஷாராகி விடுகிறது விலங்குகள். இதற்கு மாற்று வழியாக புதிய வடிவில் கூண்டு வடிவமைக்க திட்டமிட்ட வனத்துறையினர், இப்போது 8 அடி நீளம் மற்றும் 4 அடி அகலத்தில் தென்னங்கீற்றுகளால் மேற்கூரை வேய்ந்த கூண்டுகளை வடிவமைத்துள்ளனர்.
இந்த கூண்டிற்கு மர நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளதால் இயற்கையாக ஆடுகளை அடைத்து வைக்கும் கொட்டகை போன்று இருக்கிறது. இந்த கூண்டினை புலி மற்றும் சிறுத்தை நடமாட்டமுள்ள விளைநிலங்களில் வைத்தால், விலங்குகள் இதை ஆட்டுப்பட்டி தான் என நம்பி எளிதில் கூண்டிற்குள் சிக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள். இந்த கூண்டுகளுக்கும் போக்கு காட்ட தெரியாத நமது காட்டு விலங்குகளுக்கு என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.