Skip to main content

 கத்திரி வெயில் இன்றோடு கட் 

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

 

கடந்த 4ம் தேதி ஆரம்பித்த கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கமான அக்னி வெயில் 25 நாட்களுக்குப் பின்பு இன்றுடன் போய்வருகிறேன் என்று விடை பெறுகிறது.

 

a

 

கடந்த பிப்ரவரியின் கடைசி நாட்களிலேயே நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ஏறத் தொடங்கி 104 டிகிரி அளவு சராசரியாக மூன்று மாதங்கள் வரை கொளுத்தியடித்தது. சாமான்ய மக்கள் முதல் அசாதாரணமான மக்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் வெயிலின் புழுக்கத்திற்கும், இரவு தூக்கமின்மைக்கும் ஆளானார்கள்.

 

வெயிலின் கொடுமையால், பொது மக்கள் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம், தவிர்த்து விடுங்கள். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது.

 

a

 

ஆனாலும் கோடை மழை அவ்வப்போது வழக்கம் போல் தலைகாட்டும். வெப்பம் குறையும், என்றிருந்த மக்களுக்கு ஏமாற்றமே பலனானது. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. டூவீலர், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற் குள்ளானார்கள். காரணம் வெயிலின் அளவு கோல் 107 டிகிரி பாரன்ஹீட்டானதுதான்.

 

a

 

இந்த வெயிலின் கொடுமைக்கு நீர் நிலைகளும் தப்பவில்லை. வற்றாத பாபநாசம் அணை, மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர் மட்டும் சரிவு. பாபநாசம் அணையின் நீர் இருப்பு 9.30 அடி, சேர்வலாறு அணை 47.28 அடி மணிமுத்தாறு நீர் இருப்பு 63.05 அடி என சரிந்தது விளைவு மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு. வன்னிக்கோனேந்தல் கிராம மக்கள் கூட்டமாக திரண்டு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாமிரபரணி திட்டம் தங்களுக்கு நிறைறே்றப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

 

இதனிடையே சற்று ஆறுதலான விஷயம் அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைவதோடு தென் மேற்குப் பருவ மழை இன்னும் ஓரிரு நாட்களில் செட் ஆகும் என்பதே. அதன் முன்னோட்டம் கேரளாவில் இரண்டு நாட்களில் அதன் தாக்கம் காரணமாக மழை பெய்யும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விளைவாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குற்றால சாரல் மழை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 

சார்ந்த செய்திகள்