நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் ஆவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் அ.தி.மு.க.வின் அமைப்புச் செ.வான நெல்லையைச் சேர்ந்த சுதா.பரமசிவன் கடந்த வாரம் திடீரென்று இவரது தலைமையைக் கொண்ட ஆவின் பாலகம் பரபரப்பான ஜனரஞ்சகமுள்ள ஜங்ஷன் சூப்பர் மார்க்கெட் பகுதியில் ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்கிற பாலகத்தின் விற்பனையகத்தை திறந்து வைத்தது. அதில் பால் சம்பந்தமான உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
உணவுப் பொருளகம் திறக்க வேண்டியது தான். ஆனால் அதன் விற்பனையகம் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு. இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்றனர் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள்.
பாலகம் அமைந்திருக்கும் பகுதி பரபரப்பான சூப்பர் மார்க்கெட்டைக் கொண்ட குறுகிய சாலை. அருகிலுள்ள ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் புதிய பேருந்து நிலையமாக அமைக்கப்படுவதால் ஏற்கனவே மக்கள் நடமாட்டம் நெருக்கமான இந்தப் பகுதியில் பாலகத்தின் ஆக்கிரமிப்பால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தவிர இரண்டும் பெரிய தியேட்டர்கள் இங்கே உள்ளதால் அன்றாடம் இதற்கு திரளும் கூட்டத்தின் போக்குவரத்தும் இங்கே தான் உள்ளது. மட்டுமல்ல, ஜங்ஷனின் முக்கியமான சாலைக்குமரன் கோவில் இந்தப் பகுதியிலிருப்பதால் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது சொக்கப்பனை பெரிய தீபம் வழக்கமாக இந்தப் பகுதியில் தான் ஏற்றப்படுவதுண்டு. அப்போது பக்தர்கள் கூட்டம் திரளும் கடந்த 10ம் தேதியன்று கார்த்திகைத் திருநாளில் சொக்கபனை மெகா தீபம் ஏற்றப்படும் போது கூட ஆக்கிரமிப்பால் அந்தப் பகுதியின் கடைகளின் முன் பகுதிகள் அகற்றப்பட்டு மிகவும் திணறிய நிலையில் தீபம் ஏற்றப்பட்டது எனவே பொது மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ள இந்தப் பகுதியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
கடையோ, டெப்போவோ புதிதாக ஆரம்பிக்க வேண்டுமானால் மாநகராட்சியிடம் முறைப்படி முன் அனுமதிபெற வேண்டும் அந்த வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, பாலகம் விற்பனைக் கடைக்கு அனுமதி வழங்கவில்லை என்கிறார்கள்.