Published on 06/04/2019 | Edited on 06/04/2019

தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் சார்பில் பாரதி புத்தகாலயம், ''நீட் அபாயம் நீங்கிவிட்டதா?'' என்னும் நூல் வெளியிட்டுள்ளது. இந்த நூலை நீதிபதி அரிபரந்தாமன் வெளியிட்டார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற இந்த விழாவில் பத்திரிகையாளர் மயிலை பாலு. உலகப்புகழ் பெற்ற மருத்துவர் ஆர்.பி.சண்முகம், பேராசிரியர் சுந்தரவள்ளி, மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், மருத்துவர் காசி ஆகியோர் பங்கேற்றனர்.