
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான உச்சபட்ச வயது வரம்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வாரம் காலம் நீட்டித்தும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக 7.12.2018 என நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இன்று கடைசி நாள். விண்ணப்ப கட்டணத்தை செலுத்த நாளை கடைசி நாளாகும். அதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டு நீட் தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவ-மாணவிகள் இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்.