இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. இன்று (05.05.2024) மதியம் 02.00 மணிக்கு தொடங்கியுள்ள நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள 36 மையங்களில் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர்.
முன்னதாக சென்னை எழும்பூர் ஆண்டர்சன் சாலையில் அமைந்துள்ள ஆசான் மெமோரியல் செகண்டரி பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கு இடமில்லாமல் சாலையில் அமர்ந்து படித்தனர். மேலும் சில மாணவ மாணவிகள் அதிகாலையே புறப்பட்டு வந்ததால் சாலையிலேயே உணவருந்தினர். பெற்றோர்களும் இடமில்லாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர்.
- படங்கள் : எஸ்.பி. சுந்தர்