ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் பல்வேறு புள்ளிவிவரங்கள் கேட்கப்பட்டு பொருளாதார விவகாரங்களுக்காகவும், அரசின் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் பயன்படுத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு செப்டம்பர் 30- ஆம் தேதி வரை சென்சஸ் நடக்கவுள்ளது.
என்.சி.ஆர். நாடு முழுவதும் அமல்படுத்துள்ள நிலையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதார் கார்டு தொடங்கி பெற்றோர் இருப்பிட சான்றிதழ் வரை காட்ட வேண்டும் என்றதும், மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் இவைகள் தேவையில்லை என்றும் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளார்.
இந்த சூழலில் தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு வருகின்ற சூழ்நிலையில் ஆசிரியர்கள் இதுபோன்ற கணகெடுப்பு செல்வதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு ஏதுவாக அமைவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கபடுகிறார்கள். ஆறுமாத காலம் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் போவதால் குறைந்தபட்சம் 60,000 ஆசிரியர்களுக்கும் மேலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் பெரும்பாலும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டதை போல் இந்தாண்டும் நடக்காமல் தடுக்கமுடியும்.
ஆகையால் முன் கூட்டியே இப்பணியினை முழுநேர வேலையாக மாற்றி படித்து வேலையில்லாமல் காத்திருக்கும் பல லட்சம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு, அந்த பணியை கொடுத்தால் பயனுள்ளதாகவும் இருக்கும் என தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் சங்கம் தலைவர் கே.பி. இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.