சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் மரம் வளர்பததை வலியுறுத்தும் வகையில் அவ்வப்போது மரங்கள் நடபட்டு வருகிறது. 8 வழி சாலை அமைக்க தற்போது லட்ச கணக்கில் மரங்களைவெட்ட போவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு 8 வழி சாலையை 13,422 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த அதிவிரைவு சாலையானது சென்னைக்கு அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கி பெங்களூர் வரை சுமார் 262 கிலோ மீட்டர் வரை அமைக்க பட இருக்கிறது. இந்த அதிவிரைவு சாலைகள் அமைபதற்கான சுற்றுசூழல் அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சுற்றுசூழல் மதிப்பீட்டு குழுவிடம் விண்ணப்பித்து இருக்கிறது.
அதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலத்திருந்து மொத்தம் 70 ஹெக்டர் வனப்பகுதியை கையகப்படுத்தவுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 5.42 ஹெக்டோர் நிலத்தை ஆணையம் கையகப்படுத்த போவதாகவும், இந்த திட்டத்தில் மூன்று கட்டங்களாக மரங்கள் வெட்டபட இருக்கிறது. முதல் கட்டமாக 1 லட்சம் மரங்களும், இரண்டாவது கட்டமாக 24,800 மரங்களும், மூன்றாவது கட்டமாக 10,450 மரங்கள் வெட்டபோவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் கட்டத்தில் பல பகுதிகள் தமிழக எல்லைக்குள் வருகிறது. மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்கள் வெட்டபட இருக்கிறது. அந்த விண்ணப்பத்தை பரிசிலனை செய்த பின்னர் மதிப்பீட்டு குழு திட்டதிற்காண TOR (Terms of Referance) வழங்கி இருக்கிறது. மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், 1 லட்சத்திற்கு மேலான மரங்கள் வெட்டபடுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யுமாறும், தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் வாங்குமாறும் கூறியிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த நீர் எங்கு இருந்து பெறப்படும் என்று கேட்டு இருக்கிறது.
சென்னை முதல் சேலம் வரை அமைக்க பட இருக்கும் பசுமை வழிசாலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் தற்போது இந்த திட்டதிற்கும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.