Published on 23/12/2021 | Edited on 23/12/2021

தேசிய உழவர் தினத்தையொட்டி, விவசாய பெருமக்களுக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை, அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.