Skip to main content

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாழ்படுத்தியவர் மோடி- நாஞ்சில் சம்பத் தாக்கு!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தி.மு.க கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தையும், தட்டாஞ்சாவடி தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாராம் செய்தார்.

 

NANJIL SAMPATH

 

அப்போது அவர், “ இந்தியாவின் காவலாளி என பிரதமர் மோடி தன்னை கூறி வருகிறார்.  கோடிக்கணக்கில் மோசடி செய்த நீரவ் மோடி தப்பி சென்றபோது கண்டு கொள்ளாமல் இருந்தவரா நாட்டின் காவலாளி?  ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என ஏற்கனவே உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தது தெரிந்தும், ஒரே நேரத்தில் அத்தனை ராணுவ வீரர்களையும் தரை வழி பயணத்திற்கு அனுமதித்தவரா நாட்டின் பாதுகாவலர்?  ரபேல் விமான ஊழல் குறித்து அவரால் பதில் கூற முடியுமா? மோடி ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. இந்தியாவின் பன்முக தன்மையை அவர் பாழ்படுத்தி விட்டார். தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ என தன்னாட்சி அமைப்புகளை பிரதமர் மோடி சிதைத்துள்ளார்.

 

 

புதுச்சேரி மாநிலத்தில் கவர்னராக உள்ள கிரண்பெடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அரசியல் பாரம்பரியம் கொண்டவர். அவருக்கு போடும் ஓட்டு பெற்ற தாய்க்கு சேவை செய்வதற்கு சமம். பா.ஜ.கவுக்கு போடும் ஓட்டு கடலில் விழும் மழைத்துளி போன்று பயனற்றது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்