








Published on 14/01/2023 | Edited on 14/01/2023
சென்னை சங்கமம் எனும் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியை நேற்று (13.01.2023) சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தொழில் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.