Skip to main content

தொடர்ந்து 8வது நாளாக சிறையில் நளினி உண்ணாவிரதம்...

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் முருகனின் மனவைி நளினியும் தண்டனை அனுபவித்துவருகின்றனர். தனக்கு பரோல் வேண்டும் எனக்கேட்டு முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், முருகனின் அறையில் இருந்து ஸ்மார்ட் போன், இரண்டு சிம்கார்டுகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை சார்பில் பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அந்த செல்போனை ஆய்வு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.
 

nalini murugan

 

 

சிறை விதிகளை மீறியதால் 3 மாதங்களுக்கு முருகனின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து முருகன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

கடந்த 26ந்தேதி முதல் பெண்கள் சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தனது கணவரை தனியறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதாகவும், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்துவதாக கூறி உண்ணாவிரதம் இருப்பவர், இது தொடர்பாக முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்திருந்தார்.

நளினியின் உண்ணாவிரதத்தை ஏற்றுக்கொண்டுள்ள சிறை நிர்வாகம், உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதே நேரத்தில் அவரது உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கையை சிறை நிர்வாகம், தினமும் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஐீ ஜெயபாரதியிடம் வழங்கிவருகிறது.

கடந்த 26ஆம் தேதியில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கி இன்றுடன் எட்டாவது நாளிலும் தனது உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார். அதேபோல முருகனும் 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் நளினி தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்