கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் வேலை பார்ப்பவர் சிவக்குமார். இவருக்கும் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த நளினிக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஜீவித்குமார், 5 வயதில் ஜஸ்வந்த்குமார், ஒன்னரை வயதில் ரித்விகா என்கிற பெண் குழந்தை இருந்தது.
நளினியின் போக்கால் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் இருவரும் பிரிந்தனர். மகன்கள் இருவரை கணவரிடம் விட்டுவிட்டு ஒன்னரை வயது குழந்தையோடு வாணியம்பாடியில் தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
நளினிக்கும் அதே பகுதியை சேர்ந்த சென்னையில் பணியாற்றும் முரளி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனி வீடு எடுத்து வாணியம்பாடியில் தங்கியிருந்தனர். தங்களது உறவுக்கு குழந்தை தடையாக இருப்பதால் அதை கொலை செய்து வீச முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி 16ந்தேதி, பச்சிளம் குழந்தையை, தங்களது காம இச்சைக்காக, உடல்பசியை முறையற்ற வகையில் தீர்த்துக்கொள்ள கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
திடீரென குழந்தை அழுதது இறந்துவிட்டது எனச்சொல்லி நாடகமாடினர். நளினியின் குடும்பத்தாருக்கு இதில் சந்தேகம் வந்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அதன் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்ததாக போலிஸார் கூறுவதில் இருந்து, என்னை திருமணம் செய்துக்கொள் என முரளியிடம் கேட்டேன். விவாகரத்து வாங்காத உன்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது. அதோடு, அவனுக்கு பிறந்த பெண் குழந்தை உன்னிடம் உள்ளது. அதை நான் வளர்க்க முடியாது எனக்கூறினான். இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என வாக்குமூலம் தந்துள்ளார் என்கின்றனர்.
நளினியை கைது செய்து சிறையில் அடைத்த போலிஸார், முரளியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.