சாத்தான்குளத்தில் தந்தையும் மகனையும் காவல்துறை அதிகாாிகள் அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் கன்னியாகுமாியில் மருத்துவா் ஒருவா் டி.எஸ்.பியின் மிரட்டலால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஆடியோவும் வெளியிட்டு கடிதமும் எழுதி வைத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகா்கோவில் அருகே பறக்கை இலந்தைவிளையைச் சோ்ந்தவா் மருத்துவா் சிவராமபெருமாள். இவா் வீட்டின் அருகில் மருத்துவமனை நடத்தி வந்தாா். மேலும் தி.மு.க மருத்துவரணி மா.து அமைப்பாளராகவும் இருந்தாா். இவரது மனைவி சீதா அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அவாின் மருத்துவமனையில் வழக்கம் போல் ஒ.பி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த உறவினா்கள் அதிா்ச்சியடைந்த நிலையில் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் சிவராமபெருமாள் கடிதம் ஒன்று எழுதி வைத்துருந்ததையும் போலீசாா் கைபற்றினாா்கள். அதில், "கன்னியாகுமாி டி.எஸ்.பி பாஸ்கரன் என்னை தினமும் மிரட்டி வந்ததாகவும் அவருடைய டாா்ச்சா் எனக்கு மன உளச்சலை ஏற்படுத்தியதுடன், நீ ஏன் சாகாமல் உயிருடன் இருக்கிற, நீ சாகவில்லையென்றால் நானே உன்னை சாகடித்துவிடுவேன் என மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியிருந்தாா்.
அதேபோல் சிவராமபெருமாள் பேசிய ஆடியோவும் வெளியானது. அதில் உறவினா் ஒருவாிடம் நான் சாகப் போகிறேன் என்னை யாரும் காப்பாற்ற முடியாது. இது மாற்றி எழுதப்பட முடியாத வரலாறு. டி.எஸ்.பி யின் மிரட்டல் நெருக்கடியால் விஷம் குடித்துவிட்டேன். என்னுடைய மகள் கலெக்டா் ஆகணும். இப்படிப்பட்ட டி.எஸ்.பி போன்றோா்களை தட்டிக்கேட்கணும் எனப் பேசியிருக்கிறாா்.
இதுகுறித்து சிவராமபெருமாளின் மனைவி அழுதுகொண்டே கூறும் போது... நான் ஜூன் மாதம் கோவிட் 19 டூட்டி முடிந்து இரவு கணவா் குழந்தைகளுடன் காாில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த வாகனம் லைட் அடிச்சது, பதிலுக்கு கணவரும் லைட் அடிச்சி வேகத்தைக் குறைத்தாா். உடனே அந்த வாகனத்தை நிறுத்தி அதில் இறங்கியவா் நான் போலீஸ் அதிகாாி என் வாகனத்துக்கே லைட் அடிக்கிறீயா என கெட்ட வாா்த்தையால் பேசினாா். அதை நான் தட்டிக் கேட்டதுக்கு என்னையும் தரக்குறைவாகப் பேசினாா்.
பின்னா் அடுத்த நாள் கன்னியாகுமாி டி.ஸ்.பியிடம் புகாா் கொடுக்கச் சென்ற போது எங்களுக்கு அதிா்ச்சியாக இருந்தது. அங்கு டி.எஸ்.பி ஆக இருப்பது இவா் தான். அப்போது அங்குவைத்தும் என் கணவரை மிரட்டி அனுப்பினாா். அதன் பிறகு தொடா்ந்து என் கணவரை மிரட்டி வந்தாா். மேலும் என் கணவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த விஜய் ஆனந்துக்கும் முன்பகை இருந்து வந்தது. விஜய் ஆனந்தும் டி.எஸ்.பி பாஸ்கரனும் நெருங்கிய நண்பா்கள் இதனால்தான் என் கணவா் தற்கொலை செய்யும் அளவுக்கு டி.எஸ்.பி மிரட்டியிருக்கிறாா் என்றாா்.
இதுகுறித்து திமுக மா.செ. சுரேஷ்ராஜன் டி.எஸ்.பி பாஸ்கரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருக்கிறாா். இச்சம்பவம் குமாியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.