திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏற்கனவே பெண் காவலர் ஒருவரும் ஆண் காவலர் ஒருவரும் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பேசு பொருளாக மாறிய நிலையில்,தற்போது இதே போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த வாரத்தில் திருச்சி ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஏட்டுடன், நாகப்பட்டினம் டவுன் டி.எஸ்.பியாக இருக்கும் பாலகிருஷ்ணன் தனிமையில் இருந்ததுள்ளார். அப்போது பெண் போலீஸின் உறவினர்கள் இருவரையும் கையும் களவுமாக வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது, நாமக்கலைச் சேர்ந்த டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றும் போது ஆயுத படையில் பணியாற்றிவரும் பெண் போலீஸுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாலகிருஷ்ணன் நாகைக்கு மாற்றப்பட்டு டவுன் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெண் போலீசை டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் நாகைக்கு அழைத்துச் சென்று இருவரும் ஒன்றாக தங்கியிருந்து விட்டு பின்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளனர்.
வழியில் அவர்களை பிந்தொடர்ந்த பெண் போலீஸின் உறவினர்கள், பாபநாசம் அருகே இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ஒரு குற்றவாளியை பிடிக்க வந்திருப்பதாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் பெண் போலீஸின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு கையும் களவுமாக பிடிப்பதற்காக இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிடு கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டி.எஸ்.பி பாலகிருஷ்ணனை மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளிடம் இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம், இதில் நீங்கள் எதற்கு தலையிடுகிறீர்கள் என்று கடுமையாக நடந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு உயர் அதிகாரியிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இந்த வழக்கை கையில் எடுத்த காவல்துறை முதலில் பாபநாசம் பகுதி சாலையில் உள்ள உள்ளுர் போலீசாரின் உதவியுடன் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து இந்த சம்பவம் குறித்து உண்மைத் தன்மையை அறிய காவல்துறையினர் முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது போலிசுக்கு அதிகபட்சமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாம்.
பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றியபோது ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டுடன் உறவு வைத்திருந்தாரோ, அதேபோல் தற்போது பணியாற்றி வரும் நாகையிலும் இரண்டு பெண் காவலர்களுடன் உறவு வைத்துள்ளாராம். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் இது தொடர்பான பல புகார்கள் வர ஆரம்பித்துள்ளதால். இவர் பல பெண்களுடன் தனிமையில் இருந்து வருவதும், இவருக்கு பல பெண்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறதாம். முதல்கட்ட விசாரணையில் நாகையில் இரு பெண் காவலர்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் மீது உரிய நடவடிக்கை சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.