Published on 30/07/2021 | Edited on 30/07/2021

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள பட்டாக்குறிச்சியைச் சேர்ந்த பச்சமுத்து - செல்வி தம்பதியினர், நேற்று (29.07.2021) காலை வயலுக்குச் சென்றுவிட்டு மதியம் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகளையும், ரொக்கப் பணம் 72 ஆயிரம் ரூபாயையும் திருடிச் சென்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து பச்சமுத்து அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.