Skip to main content

சென்னை பெருங்குடி மர்ம கொலை;கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21ம் தேதி கை, கால் துண்டுதுண்டாக பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட கொலை சம்பவத்தில் தற்போது துப்பு துலக்கியுள்ளனர் போலீசார்.

 

கொல்லப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில், துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என பள்ளிக்கரணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 

 Mysterious murder in Chennai

 

சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்துவந்த சந்தியா என்ற அந்த பெண் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்திற்குச் சென்று அங்கு இருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட இருக்கின்றனர். அதேபோல் பாலகிருஷ்ணனிடம் இந்த கொலை தொடர்பான வாக்குமூலங்களை பெரும் முயற்சியில் பள்ளிக்கரணை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். எஸ் ஆர். பாலகிருஷ்ணன் என்ற அவர்  அண்மையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டுள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் ''காதல் இலவசம்'' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அந்த படமானது 2015ல்  வெளியானது. அதை தயாரித்தது கொலையான சந்தியா.

 

MURDER

 

எப்படி இந்த கொலை நடந்தது, சம்பந்தப்பட்ட பெண் சந்தியாவை அவர் எப்படி கொலை செய்தார், எந்த காரணத்திற்காக கொலை செய்தார் என்ற  முதல்கட்ட விசாரணையில் பாலகிருஷ்ணனின் மனைவியான சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஐந்தும் முறை வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இதுகுறித்து பலமுறை பாலகிருஷ்ணன் எச்சரித்தும் சந்தியா கேட்க்காததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் சந்தியாவை வெட்டி கொன்று உடல் பாகங்களை வீசி எறிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடல் பாகங்கள் எங்கு வீசப்பட்டது என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

MURDER

 

கை, கால்கள் மட்டும் குப்பையில் கிடந்த நிலையில் அந்த பெண்ணின் உடலை எங்கே வீசினார் என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.