மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலையம் திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள், வழிபட்டுத்தளங்கள், பூங்காக்கள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும்போதே அனைத்திற்கும் வழிகாட்டு நெற்முறைகளையும் அறிவித்தது அரசு. அதன்படி வழிபாட்டு தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறையாக, மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளிவிட்டு, ஆலயங்களுக்குள் நுழையும் முன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கைகளை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், சிறப்பு பூஜைக்கான பூ, பழம் ஆகியவைகளை கொண்டு செல்லக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த வழிமுறைகளுடன் இன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலையம் திறக்கப்பட்டது.