மாநகர பேருந்து மோதி ஊழியர் பலி
சென்னை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் குமார் (40), தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று காலை, வடபழனி பஸ் நிலையம் அருகில் பைக்கில் சென்றபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், பிளாட்பாரத்தில் பைக்கை ஏற்றி ஓட்டி சென்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பைக்கில் இருந்து சாலையில் விழுந்தார். அப்போது, கோயம்பேட்டில் இருந்து தி.நகர் நோக்கி சென்ற மாநகர பஸ் (எம்27) அவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.