Skip to main content

கருப்பு பூஞ்சை- எந்த மாவட்டத்தில் அதிக பாதிப்பு?

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

mucormycosis in tamilnadu cases government

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு கருப்பு  பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 108 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 74 பேரும், கோவை மாவட்டத்தில் 43 பேரும், சேலம் மாவட்டத்தில் 38 பேரும், மதுரை மாவட்டத்தில் 26 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 23 பேரும், திருச்சி மாவட்டத்தில் 21 பேரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 196 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் 204 பேருக்கும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்