கடந்த 30 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற எம்.எஸ்.எம்.இ கவுன்சில் கூட்டத்தில் அதன் மாநிலத் தலைவரான நமீதாவின் கணவர் சவுத்ரி பங்கேற்றார். ஒன்றிய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. சேலத்தைச் சேர்ந்த கோபாலசாமி என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் ஒன்றிய அரசின் முத்திரை மற்றும் தேசியக் கொடியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக முத்துராமன், துஷ்யன் என்ற இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். நமீதாவின் கணவர் சவுத்ரி மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மோசடி புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சவுத்ரி உட்பட இரண்டு பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனாலும் நமீதா கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் மஞ்சுநாத் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.எஸ்.எம்.இ மோசடி வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.