மர்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம்
மக்களை மறந்து மாட்டு அரசியல் செய்யும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆக 18 முதல் 23 வரை நாடு தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் நகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டக்குழு முத்து, மாதர் சங்கம் மல்லிகா, அமுதா. போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினர்.
-காளிதாஸ்