Skip to main content

பாமகவிலிருந்து சண்முகம், அருள்பிரகாசம் நீக்கம்

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
பாமகவிலிருந்து சண்முகம், அருள்பிரகாசம்  நீக்கம்

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு:

’’சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தமயனூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க அணித் தலைவர் க. சண்முகம், ஆத்தூரைச் சேர்ந்த முன்னாள் நகர செயலாளர் சி. அருள்பிரகாசம் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், இன்று  (06.09.2017) புதன்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார்கள். கட்சித் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.’’

சார்ந்த செய்திகள்