வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் குமார் - சாந்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் வேலைக்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். சென்னையிலேயே மகள்களை படிக்க வைத்தனர்.
வேலைக்கு சென்றயிடத்தில் சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் அபிராமிநகரை சேர்ந்த ஞானவேல் என்கிற இளைஞனுடன் சாந்திக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த குமார், தனது மனைவியை சாந்தியை எச்சரித்துள்ளார். அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளாததால் மனைவியை பிரிய முடிவு செய்தார். ஆளுக்கு ஒன்றாக மகள்களை பிரித்துக்கொண்டனர் கணவனும் - மனைவியும். தனது மூத்த மகளுடன் வேலூருக்கே வந்துவிட்டார் குமார். இளைய மகளுடன் சென்னையிலேயே வசித்து வந்தார் சாந்தி. ஞானசேகரனுடன் தொடர்பு வைத்துக்கொண்டுயிருந்தார்.
இரண்டு ஆண்டுக்கு முன்பு ஞானசேகரனின் பார்வை, சாந்தியின் இளைய மகள் மீது திரும்பியது. எனக்கு வீட்ல திருமணம் செய்து வைக்க பார்க்கறாங்க. உன்னை என்னால பிரிஞ்சி இருக்க முடியாது. அதனால் நான் ஒரு ஐடியா வச்சியிருக்கன். உன் மகளை நான் திருமணம் செய்துக்கிட்டன்னா, உன்னை பிரிய முடியாது என ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.
இந்த ஆசைக்கு மயங்கிய சாந்தி, கள்ளக் காதலனை மருமகனாக்கிக்கொள்ள சம்மதித்துள்ளார். உன் மகளுக்கு 18 வயசாகட்டும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என ஆசை உறுதி தந்த ஞானசேகரன், சாந்தி இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். இந்த அத்துமீறலை அவரது தாயாருக்கு தெரிந்தபோதும் கண்டுக்கொள்ளவில்லை. இது ஒருக்கட்டத்தில் தாய் - மகள் இருவருடன் ஞானசேகரன் உல்லாசமாக இருந்ததோடு, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளான்.
இதனால் மனம் வேதனையடைந்த சாந்தியின் மகள், வேலூருக்கு வந்து தனது தந்தை குமாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அவர் தனது மகளுடன் வந்து வில்லிவாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் இதுப்பற்றி புகார் தந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டான். வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் வீடியோ ஆதாரம், உறவு கொண்டதற்கான ரத்த மாதிரிகள் போன்றவை ஞானசேகரனுக்கு எதிர் சாட்சியாக இருந்து குற்றத்தை உறுதி செய்தன. ஜீன் 4ந் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி மஞ்சுளா, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் குற்றவாளி ஞானசேகரனுக்கு 18 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம், பெண்களுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு அரசு இழப்பீடு 1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் மூலம் தவறு செய்த அந்த இளைஞன் சிக்கி தண்டனை அனுபவிக்கிறான். அந்த தப்புக்கு மூலக்காரணமான அந்த பெண் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது. அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டு தனது கள்ளக்காதலுக்கு மகளை விருந்தாக்கிய குற்றத்துக்காக அவரையும் தண்டித்துயிருந்தால் தவறு செய்ய நினைக்கும் பெண்களுக்கு அது எச்சரிக்கையாக இருந்துயிருக்கும்.
ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டுமே பாதிக்கப்படும். ஒரு குடும்பபெண் தவறு செய்தால் அந்த தலைமுறையே பாதிக்கப்படும் என கிராமத்தில் சொல்வார்கள். தனது உடல் தேவைக்காக செய்த தவறு அவரது மகளை பாதித்துவிட்டது. இனி அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு பெரும் கேள்விக்குறி.