சென்னையில் 24மணி நேரம் தொடர்ந்து 167 பெண்களுக்கு சடைபின்னி உலக சாதனை மூலம் கூந்தலின் அவசியம் பற்றியும், நமது பாரம்பரிய அழகு கலை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன்.
நமது கலாச்சார மற்றத்தாலும், உணவு பழக்க வழக்கங்களாலும் ஆரோக்கியம் குறைந்து பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள் தங்களது கூந்தலை இழந்து வருகின்றனர். நவீன காலத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் கூந்தலின் மீது அக்கறை குறைந்துவிட்ட இன்றைய இளம் தலைமுறை பெண்கள் சடை பின்னுவதை அவமானமாகவும், மிக சிரமமாகவும் நினைப்பதால் 70 சாதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நீளமான கூந்தலை வளர்க்க விரும்புவதில்லை. இதனால் நமது பாபரமரியமான அழகு காலையில் ஒன்றான சடை பின்னுதல் அழிய தொடங்கி வருகிறது.
ஆங்காங்கே திருமண சடங்குகளிலும், சுப நிகழ்வுகளிலும் காட்சியளிக்கும் சடைகளும்கூட ரெடிமேட் சடைகள், அல்லது போலி (சவுரி) முடியினை வைத்து அழகு படுத்தப்படுத்தபட்ட சடைகளாகவே இருக்கிறது.மேலை நாட்டு கலாச்சாரம் இப்போது படிப்படியாக நம் தமிழ் பெண்கள் தலைகளிலும் கை வைக்க தொடங்கிவிட்டது என்பது நாம் வருந்தவேண்டிய விஷயம்.
சடை பின்னுதல் குறித்த விழிப்புணர்வை வரும் தலைமுறையினருக்கு கொண்டுசேர்க்கும் விதமாக இந்த உலக சாதனை நிகழ்வு சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. சரியாக 7ஆம் தேதி மாலை 7.15pm மணிக்கு தொடங்கி 8ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வின் இறுதியில் 167 பேருக்கு தலைமுடி பின்னப்பட்டது.
இந்த உலக சாதனை நிகழ்வானது முறையாக கின்னஸ், மற்றும் யுனிக் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்து நடத்தப்பட்டது, அதன் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை சரியாக பின்பற்றி சடைபின்னுதல் சரியான முறையில் பின்னப்பட்டதா என்பதை "அனைத்து இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்கள்" நேரடியாக காண்காணித்தனர். கூடுதலாக இந்த உலக சாதனை முயற்சியின் காட்சி ஆதாரத்திருக்காக 6 வீடியோ கேமராக்கள், 4சிசிடிவி கேமராக்கள் என 10க்கும் மேற்பட்ட கேமராக்களை கொண்டு வெவ்வேறு கோணங்களில் 24நேரமும் பதிவு செய்யப்பட்டது. சாதனை நிகழ்வின் இறுதியில் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின் இதனை புதிய உலக சாதனை ''மோஸ்ட் ஹெட்ஸ் ப்ரைடேட் இன் 24 ஹவர்ஸ்'' என பதிவு செய்தும்,
வாசுகி மணிவண்ணன்-ஐ உலக சாதனையாளராக அங்கீகரித்தும், உலக சாதனை சான்றிதழினை "Unique World Records Limited"-ன் தலைமை தீர்ப்பாளர் மற்றும் "சாதனை சிகரம் கிரியேஷன்ஸ்" தலைவர் திரு.ரஹ்மான் வழங்கி கெளரவித்தார்.
அத்துடன் "அனைத்து இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்கத்தின் தலைவர் "திருமதி.சங்கீதா சவ்ஹான்" மற்றும் தமிழக தலைவர் முத்து லட்சுமி, Natural's அழகு நிலையம் உரிமையாளர் திருமதி வீணா, மஹா பியூட்டி அகாடெமி இயக்குனர். மஹா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்சியை சிறப்பித்தனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை கண்டுகளித்ததுடன் சாதனையாளரை உற்சாகபடுத்தினர்.