1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நீட் தேர்வுக்கு தேர்வுக்கு எதிராகவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வழங்கக் கோரியும் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ,அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்க கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டதில் மத்திய மாநில அரசு களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.