பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 28 ஆம் தேதி என் மக்கள் என் நாடு என்ற முழக்கத்துடன் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை 168 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி பாஜக மாநகர் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் லோகநாதன் உட்படக் கட்சியின் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்களுடன் வாருங்கள் என்று கூறி, ‘கடமை கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கழகம் காப்போம்’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றுள்ளார். மேலும் திமுகவில் இணைந்த லோகநாதன் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுகவில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.