மூப்பனார் நினைவு நாள்: ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி
ஜி.கே.மூப்பனாரின் 16-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் பின்புறம் அமைந்துள்ள மூப்பனார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 9.30 மணி அளவில் மூப்பனாரின் மகனும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சர்வமத பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாபா. பாண்டியராஜன், கே.பி. முனுசாமி, ஜே.சி.டி. பிரபாகர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்பட ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.