மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் அதன் தலைவராகவும், பிரதமராகவும் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார். அதன் விவரம் வருமாறு:
மருத்துவர் அய்யா: Vanakkam!
பிரதமர் நரேந்திர மோடி: How is your Health?
மருத்துவர் அய்யா: I am fine. And My hearty congratulations on your Himalayan victory. I am extremely happy that our Nation is in your capable hands once again.
பிரதமர் நரேந்திர மோடி: When are you coming to Delhi?
மருத்துவர் அய்யா: I will meet you in Delhi shortly. Congratulations once again.
பிரதமர் நரேந்திர மோடி: Thank You!
தமிழாக்கம்
மருத்துவர் அய்யா: வணக்கம்!
பிரதமர் நரேந்திர மோடி: உங்கள் உடல்நிலை எவ்வாறு உள்ளது?
மருத்துவர் அய்யா: நான் நன்றாக உள்ளேன். உங்களின் இமாலய வெற்றிக்காக எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாடு உங்களின் திறமைமிகு கரங்களில் மீண்டும் ஒரு முறை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி: நீங்கள் எப்போது தில்லிக்கு வருகிறீர்கள்?
மருத்துவர் அய்யா: நான் விரைவில் உங்களை தில்லியில் சந்திக்கிறேன். உங்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி: மிக்க நன்றி!
மருத்துவர் அய்யா: வணக்கம்!