Skip to main content

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். உறுதியாக கூற தயாரா? சி.ஆர்.சரஸ்வதி கடும் தாக்கு

Published on 24/04/2018 | Edited on 24/04/2018


 

opsepsmodi600.jpg


அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படும் என்று அம்மா நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருப்பது பற்றி அமமுகவின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவிக்கையில்,
 

மோடி தயவினால் அதிமுக பெயரை வாங்கினார்கள். ஓபிஎஸ், இபிஎஸ் பெயரில் வெளியாகும் பத்திரிகையான நமது அம்மாவில் வந்துள்ள அந்த கருத்தானது உண்மைதான். இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து டிடிவி தினகரனும், நாங்களும் சொல்லி வருகிறோம்.  
 

நமது அம்மா பத்திரிகையில் வந்த அந்த கட்டுரை பற்றி செய்தியாளர்கள் கேட்கும்போது தம்பிதுரை, ஜெயக்குமார் என ஆளுக்கொரு பதிலைதானே சொல்லிவருகிறார்கள். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தலைமை முடிவெடுக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், கூட்டணி இருக்காது என்று யாரும் மறுக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அடித்துக் கூறவில்லை. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். உறுதியாக கூற தயாரா?
 

ஓ.பி.எஸ். தெளிவா சொன்னாரே குருமூர்த்தியை சந்தித்த பிறகுதான் அம்மா சமாதிக்கு தியானம் செய்ய சென்றேன் என்று. குருமூர்த்திகூட ஒரு தனியார் தொலைக்காட்சியில் சொன்னாரே என்னை சந்தித்த பிறகுதான் அம்மா சமாதிக்கு ஓபிஎஸ் சென்றார் என்று. அதுமட்டுமின்றி அண்மையில் பிரதமர் மோடி சொன்னதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று ஓபிஎஸ் சொன்னாரே. எனவே அதிமுகவில் என்ன நடக்கவேண்டும் என பாஜகதான் முடிவுசெய்யும். 

 

opsepsmodi600.jpg


 

நாங்கள் சின்னம்மாவை முதல்வராக்க பலமுறை காத்திருந்து ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து கடிதம் கொடுத்துவந்தோம். ஆனால் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஒன்று சேர்ந்துவிட்டனர் என அறிந்ததும் ஆளுநர் ஒருமணி நேரத்தில் அங்குவந்து நிற்கிறார். ஆகவே இது அதிமுக ஆட்சி இல்லை. மத்திய அரசின் தயவால் சின்னத்தையும் பெயரையும் வாங்கி வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறது.
 

காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள். ஓபிஎஸ்சும், இபிஸ்சும் ஒரு கண்டன குரல் தெரிவித்தார்களா. மனதிற்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது அந்த நிகழ்வு. ஆனால் அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதற்காக குரல் கொடுக்காமல் இருக்கிறார்களே. ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் பாஜகவிற்கு எதிராக பேசமாட்டர்கள். 

 

சினிமாவில் நடுநடுவே வந்துபோகும் காமெடி காட்சிகளை போல அமைச்சர் ஜெயக்குமார் தினமும் மீடியாக்களை சந்தித்துவிட்டு போவார். அவர் தொகுதிக்கு போவாரோ, மக்களை சந்திப்பாரோ தெரியவில்லை. ஆனால் தினமும் பத்திரிகையாளரை சந்தித்து ஒரு பாட்டு பாடுகிறார். இந்த ஆட்சியின் எண்டெர்டையின்மெண்ட் ஜெயக்குமார்.

 

முதலமைச்சர் தெய்வம் என்று மக்கள் வரிப்பணத்தில் இன்று வாட்சாப்பிலிருந்து திரையரங்கள் வரை வெளியிடுகிறீர்களே என்ன நியாயம் இது, எம்ஜிஆர் கூட தன்னை தானே தெய்வம் என்று கூறிக்கொண்டதில்லை. மக்கள்தான் கூறினார்கள்.அம்மாவைக்கூட இதயதெய்வம் என்று மக்கள்தான் கூறினார்கள். கோவிலுக்கு சென்று பழனிசாமிக்கு அர்ச்சனை பண்ணுங்கள் என்று ஒரு விளம்பரத்தை பண்ணுகிறீர்களே மனசாட்சியே கிடையாதா? மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் எடுத்து தன்னை கடவுள் என்று நினைத்துக்கொள்கிறார்களே. எப்படிப்பட்ட சுயநலக்காரர்கள் அவர்கள் என்று மக்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்