பரங்கிப்பேட்டை அருகே கொள்ளிடம்
கூட்டுகுடிநீர் திட்டபணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளை இணைக்கும் ரயில்வே இருப்பு பாதையில் கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதித்தால் தான் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் பயன்பெறும். இதற்கான ரயில்வே நிர்வாக அனுமதி வேண்டி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டியை கடந்த 6ஆம்தேதி சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார். உறுப்பினரின் கோரிக்கையினை பரிசீலனை செய்து உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும்படி கோட்ட மேலாளர் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் வெள்ளியென்று பரங்கிப்பேட்டை ரயில்வே பாதையில் குடிநீர் குழாய் அமைக்க உள்ள இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை பொறியாளர் மோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் பாலகுமார், பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
-காளிதாஸ்