Skip to main content

சிறுவனை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்காருக்கு பாராட்டு

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
 police



விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் கடந்த 19ஆம் தேதி ஆற்றுத் திருவிழாவில் ஆனத்தூர் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்தாருடன் ஆற்று திருவிழாவிற்கு வந்துட்டு வீடு திரும்பும்போது அவரது 7 வயது மகன் கணேஷ் கூட்டத்தில் காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. 
 

இந்த நிலையில் ஹைவே பெடரோல் 2 ஜானகிபுரம் என்.எச்- 45 மனோகரன் எஸ்.எஸ்.ஐ. தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்துள்ளார். அப்போது ஆற்றுத் திருவிழாவிற்கு வந்தவர்களுடன் சிறுவன் ஒருவன் அழுது கொண்டே சென்று கொண்டிருந்தான். சிறுவனை திருவெண்ணைநல்லூர் தனிப்பிரிவு காவலர் இளையராஜா விசாரணை செய்தபோது ஆனத்தூரைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. 
 

இதையடுத்து பெற்றோருக்கு தகவல் கொடுத்து அரசூர் கூட்ரோட்டுக்கு வரவழைத்து அச்சிறுவனின் பெற்றோருடன் ஒப்படைத்தார். இந்த செயலை பாராட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் ஜெயக்குமார், தனிப்பிரிவு காவலர் இளையராஜாவை பாராட்டி நற்சான்றிதழ் வெகுமதிகளை வழங்கி கௌரவித்தார்.


 

சார்ந்த செய்திகள்