Published on 09/12/2021 | Edited on 09/12/2021

மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியத்தில் இயங்கிவரும் தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது வகுப்பறைகளில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம், அவர்களின் படிப்பு தொடர்பான பல கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த கழிப்பிடத்தை ஆய்வு செய்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு இன்று மதிய உணவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள எலுமிச்சை சாதத்தை ருசித்துப் பார்த்து சாதத்தின் தரம் குறித்தும், சாதத்திற்கு துணையாக வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார்.