Published on 21/08/2021 | Edited on 21/08/2021

திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியைச் சேர்ந்த சக்திதாசன் என்பவர், திருப்பூரில் இருந்து மொத்த மருந்து உரிமத்தின் மூலம் மருந்துகளை வாங்கி போதை பொருளாக இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தொியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சக்திதாசன், அவருக்கு உடந்தையாக இருந்த உறையூர் குமார், வரகனேரி ராம்நாத், தென்னுார் நந்தகுமார், உறையூர் பாலாஜி, சுண்ணாம்புகாரத் தெரு பிரகாஷ், உறையூர் குமார் ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சக்திதாசன் (31), குமார் (24), ராம்நாத் (31) ஆகியோர் தொடர்ந்து இந்தக் குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணம் உடையவர்கள் என்பது தொியவந்ததால், மருந்து சரக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.