Skip to main content

நில அதிர்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சக்கரபாணி!

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Minister Sakkarapani offers condolences to earthquake victims

 

ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வால் பாதிக்கப்பட்ட கே.கீரனூர் பொது மக்களுக்கு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி யூனியனில்  கே.கீரனூர் உள்ளது. இப்பகுதியில் நேற்று (25/03/2022) இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. அதேபோல், சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில வீடுகளின் ஓடுகள் விழுந்து நொறுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர். 

 

இது குறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி உடனடியாக கீரனூருக்கு சென்று நில அதிர்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். 

 

இந்த நிகழ்வின் போது, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வின் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, தாசில்தார் முத்துசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி உள்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்