மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
கவர்னரை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். கவர்னரே தேவையில்லை என்று சொல்பவர்கள், எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அவரை சந்தித்து முறையிடுகின்றனர். நாங்கள் அரசியல் காரணங்களுக்காக 7 முறை ஜெயிலுக்கு சென்றுள்ளோம். ஆனால் எங்களை விடுதலை செய்ய சொல்லி கோரிக்கை விடுத்ததில்லை.
ஆனால் தற்போது கைது செய்யப்பட்டவுடன் விடுதலை செய்யக்கோரி உடனடியாக போராட்டம் செய்கின்றனர். எதையும் தாங்கும் மனப்பக்குவம் குறைந்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துகின்றனர்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்து வருகிறார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் நிலையில் உள்ள அவர், கனிமொழி விடுதலை ஆனதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இவ்வாறு கூறினார்.