திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த சக்கரபாணிக்கு முதல்வர் ஸ்டாலின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பதவியையும் வழங்கினார். அதைத்தொடர்ந்து வாக்களித்த மக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்வதற்காக ஆயிரம் கோடியில் தொகுதி முழுவதும் கூட்டுக் குடிநீர் திட்டம், நகரம் முதல் குக்கிராமங்கள் வரை சாலை வசதி, மின்சாரம், சாலையின் நடுவில் உயர் கோபுர மின் விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகளோடு இரண்டு கலைக் கல்லூரிகள், ஐ.டி.ஐ. மற்றும் படித்த மாணவ மாணவிகளின் வேலைவாய்ப்புக்காக கலைஞர் நூற்றாண்டு பயிற்சி வகுப்புகள், விவசாயிகளுக்காக குளிர்சாதனக் கிட்டு, தொழில் பேட்டை இப்படி பல கோடி திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியும், செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறார். இதற்கு அந்த தொகுதி மக்கள் பாராட்டுகளை
ஆனால் இத்தொகுதி விவசாய நிறைந்த பூமியாக இருந்தும் கூட தொகுதி மக்களின் பிள்ளைகள் படிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதனால் ஆங்கிலம் பயிற்சி வகுப்புகள் தொடங்கி அதன் மூலம் வருங்கால இளைய சமுதாயமான மாணவ மாணவி கள் சகஜமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தனது தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி. ஒட்டன்சத்திரம் ஒன்றியங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள கே. ஆர்.மாதிரி மேல் நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அம்பிளிக்கை சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளி, திருப்பதி அருள்நெறி மேல் நிலைப்பள்ளி கள்ளிமந்தையம், அரசு மேல்நிலைப் பள்ளி பெரியகோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளி காவேரி அம்மாபட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி பரப்பலாறு, அரசு மேல்நிலைப் பள்ளி தொப்பம்பட்டி, சி.ஜி.எம் மேல்நிலைப்பள்ளி, கோரிக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி ஓடைப்பட்டி உள்பட 26 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளோடு ஒன்பது அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட மொத்தம் 35 பள்ளிகளில் ஆங்கிலம் பேச்சு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்போக்கன் ஆங்கிலம்(SPOKEN ENGLISH) பயிற்சி வகுப்புகளை அமைச்சர் சக்கரபாணி தான் சொந்த செலவில் வீடாக் பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து பேசிய வீடாக் நிர்வாக மேலாளரான முகம்மது யாசர், “கடந்த மூன்று வருடங்களாக ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை (வீடாக்) பழனியில் நடத்தி வருகிறேன். அதன் மூலம் மாணவ மாணவிகள் ஆங்கிலம் கற்றும் வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு அமைச்சர் சக்கரபாணியை சந்தித்த போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் எல்லாவற்றிலும் முதல் இடத்தை பிடித்து வருகிறார்கள். ஆனால் ஆங்கிலம் பேச்சுத் திறனில் பின்தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி அரசுப் பள்ளி மாணவ மாணவிகளும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும். அதனால் தொகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 35 பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் மூலம் மற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இங்கிலீஷ் பேசுவது போல் என் தொகுதியில் உள்ள மாணவர்களும் பேச வேண்டும் என்று தான் என் விருப்பம் என்று அமைச்சர் கூறினார். அதனைத்தொடர்ந்து தான் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வாரம் இரண்டு நாள் ஆங்கிலம் பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதில் 16 பட்டதாரி ஆசிரியர் நியமித்து நகரம் முதல் கிராமங்கள் வரை உள்ள பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. நானும் அந்த ஆசிரியர்களுக்கு கிளாஸ் சம்பந்தமான ஆலோசனை வழங்கி வருகிறேன்.
கடந்த ஆண்டு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 4ஆயிரம் மாணவன் மாணவிகள் ஆங்கிலத்தில் பேச தொடங்கியுள்ளனர். அதன் மூலம் தான் கடந்த பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆங்கில விழாவையும் நடத்தினோம். அதில் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சகஜமாக இங்கிலீஷில் பேசியதைப் பார்த்து அமைச்சரும் உடன் இருந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் சந்தோசம் மழையில் நனைந்து விட்டனர்.
அந்த அளவுக்கு இங்கிலீஷ் பேசுகிறார்கள். அதேபோல் எங்கள் ஆசிரியர்களுக்கும் அமைச்சர் விருது கொடுத்துப் பாராட்டினார். அதைத் தெரிந்து தான் இந்த ஆண்டு 6ஆயிரம் மாணவ மாணவிகள் ஆங்கிலம் பயிற்சி வகுப்புகள் மூலம் பயனடைய வருகிறார்கள். இந்த அளவுக்கு மாணவ மாணவிகள் ஆங்கிலம் பேச ஊக்கப்படுத்திய அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி எங்கள் அமைச்சர் தொடங்கியது போலவே தமிழக முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த மாதிரி ஸ்போக்கன் இங்கிலீஷ் கொண்டு வந்தால் மாணவ மாணவிகள் பயனுள்ளதாக இருக்கும். வேலைவாய்ப்புக்கு முன் உதாரணமாகவும் இருக்கும்” என்றார்.
இது சம்பந்த மாக ஆங்கிலம் பேசி பயிற்சி வகுப்புகளில் படித்து வரும் பல மாணவர்களிடம் கேட்டபோது, “ஆங்கிலம் வகுப்புகளில் பாடம் நடத்தும் போதும் மட்டுமே ஆங்கிலம் வகுப்புகளைக் கவனிப்போம் அதன் பின் டெஸ்ட். பரீட்சைகளில் ஆங்கிலத்தில் எழுதினாலும் கூட ஆங்கிலத்தில் எல்லாம் பேச மாட்டோம். ஆனால் இந்த ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் எங்களுக்குப் பயமில்லாமல். ஆங்கிலத்தில் உரையாடவும் ஆங்கிலப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறவும் உறுதுணையாக இருக்கிறது.
அது போல் தினசரி அன்றாட வாழ்வில் பேசும் தமிழ் வார்த்தைகளை தற்போது ஆங்கிலத்தில் பேசவும் கற்று இருக்கிறோம். "காலை உணவு உட்கொண்டாயா என்பதை Have you had your breakfast இப்படி இங்கிலீஷில் பேசுவோம். அது போல் சக மாணவர்களிடம் எழுதுபொருள் உதாரணங்கள் கேட்க can I have your pencil? can I have your ruler? என்பது போல் தற்போது அனைத்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. இப்படி எங்களுக்கு எளிமையாக ஆங்கிலத்தில் பேசவைத்த எங்கள் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
இந்த சம்பந்த மாக ஒட்டன்சத்திரம் சேர்ந்த சில முக்கிய பிரமுகரிடம் கேட்ட போது, “அமைச்சர் சக்கரபாணியை பொருத்தவரை கட்சி பாகுபாடுகள் பார்க்காமல் தொகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொள்வார். அதுபோல் தொகுதிக்கு எண்ணற்ற பல ஒரு திட்டங்களைக் கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். அது போல் கல்விக்கும் பெரிதும் உதவி செய்து வருகிறார்.
அமைச்சராக வந்த பின் இரண்டு கல்லூரிகள், ஒரு ஐடி கல்லூரியும் கொண்டு வந்தார். அங்குப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருடம் தோறும் தன் சொந்த பணத்தில் பீஸ் கட்டி வருகிறார். அதேபோல் ஒவ்வொரு பள்ளியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவித்து வருகிறார். அதுபோல் இங்குள்ள கே.ஆர். பள்ளி மற்றும் முத்து நாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி இப்படி தொகுதியில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பு கட்டிடகள் பல லட்சம் செலவில் கட்டிக் கொடுத்து உதவி செய்தும் வருகிறார்.
அதுபோல் பள்ளிகளுக்குத் தேவையான ஷேர் பேன் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் தற்பொழுது ஸ்போக்கன் இங்கிலீஷ் கொண்டு வந்து மாணவ மாணவிகள் இங்கிலீஷில் சரமாரியாகப் பேச வைத்து கல்வி அறிவையும் அமைச்சர் வளர்த்து வருகிறார். அந்த நன்றியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். அது போல் அமைச்சருக்கு தொடர்ந்து விசுவாசமாகத் தொகுதி மக்களும் இருப்பார்கள் என்றனர் உறுதியாக.