Published on 05/09/2022 | Edited on 05/09/2022

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன்,ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன்,வெள்ளாளர் முன்னேற்றச் சங்க கழகத் தலைவர் ஹரிஹரன் மண்டல குழு தலைவர் துர்கா தேவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.