Skip to main content

தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

Minister K. N. Nehru started the work on water way clearness

 

திருச்சி, பஞ்சப்பூர் அருகில் உள்ள கே.சாத்தனூர் கிராமம் கோரையாற்றில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி மாவட்டத்தில் 375.78 கி.மீ நீளம் வரை 100 தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.15.88 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ. 21.5 லட்சம் மதிப்பில் 3 கி.மீ. வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை விரைந்து முடிக்கப்படும்” என்றார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சொர்ணகுமார், செயற்பொறியாளர்கள் நித்தியானந்தன், தமிழ்ச்செல்வன், வருவாய்க் கோட்டாட்சியர் தவச்செல்வம், நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்