சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மடிகணினியை வழங்கினார். அதே பள்ளியில் பனி்ரெண்டாம் வகுப்பு பயிலும் ‘ஜி’ வணிகவியல் குரூப் படிக்கும் 70 மாணவிகளுக்கு மட்டும் மடிகணினி கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனை அப்பள்ளி மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று, எங்களுக்கு ஏன் கணினி கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளனர். அந்த மாணவர்களிடம் ஆசிரியர், உங்க பிரிவு மாணவர்களுக்கு மடிகணினி கிடையாது. நீங்கள் இந்த குரூப் எடுத்துபடிக்கும் போதே இதை சுதாரித்து சேர்ந்திருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பிவைத்துள்ளார்.
இதனை அறிந்த மாணவிகள் அமைச்சர் ஜெயகுமார் அவருக்கே தொலைபேசிக்கு தொடர்புகொண்டு புகார் சொல்லியுள்ளனர். ஆனால் அவர் அதை ஒரு விசயமாகவே எடுத்துகொள்ளாமல் அலட்சியப் படுத்தியுள்ளார்.
அந்த பள்ளி தலைமை ஆசிரியர் இன்று மாணவிகளை தனி அறையில் அழைத்து நீங்கள் அமைச்சருக்கே போன் செய்யுறீங்களா? இனி நீங்கள் எப்படி படிக்கமுடியும் என்று மிரட்டியுள்ளார். பிறகு அவர்களிடம் இதுபோன்று செய்யமாட்டோம் என்று மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர்.
மடிகணினி என்பது அனைத்து மாணவர்களுக்கும் தான். இந்த பாடப்பிரிவு படித்தால்தான் உனக்கு மடிகணினி என்பது இல்லை. ஆனால் வருடம் வருடம் இவர்கள் இப்படியேதான் செயகிறார்கள் என்று அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்று நான் படித்தபள்ளி என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அமைச்சர் ஜெயகுமார் இந்த பள்ளி மாணவிகளுக்கு என்ன பதில் சொல்லபோகிறார்.