Skip to main content

கல்வியை மாநில பட்டியலுக்கு திமுக மாற்றாதது ஏன்? -திமுகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020
minister jayakumar press meet in chennai

 

 

ராமசாமி படையாட்சியாரின் 103- வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் ஹால்டா அருகே உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

 

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "மத்தியில் 17 ஆண்டு கூட்டணியில் இருந்த திமுக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

 

அரசியலில் நிதானமாக விமர்சிக்க தெரியாமல் நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஸ்டாலின் விமர்சிக்கிறார். பிக்பாஸ் போல கரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன். அறிக்கை மூலம் மட்டுமே பேசும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ்க்கும் தயாராகிவிட்டார்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்