Skip to main content

“திமுக அரசை 10 ஆண்டுக்கால அதிமுக அரசுடன் ஒப்பிட முடியாது” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Minister i Periyasamy said DMK government cannot be compared with AIADMK government10 years

 

தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் சுழற்சி கடன் திட்டத்தினை திருச்சியில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக நகர்ப்புற அமைச்சர் நேரு, கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 992 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.73.78 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி,  மாவட்ட ஆட்சியர் விசாகன், மாநகர மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டது.

 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் கடன் வழங்கியதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.77 கோடிக்கு கடன் வழங்கியிருக்கிறோம். தற்பொழுது பதவியேற்றுள்ள திமுக அரசு உள்ளாட்சித் துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எந்த திட்டத்தில் என்ன குறை உள்ளது எனச் சுட்டிக் காட்டினால், அதனை விசாரித்து சரிப்படுத்தி சிறப்பாக செயல்படுத்துவோம். திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் அரசு. எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் அமைச்சர்கள் உறுதியாக உள்ளோம். அதுபோல் இத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தத் துறையை தலைசிறந்த துறையாகக் கொண்டு வருவார். சுயநலத்துக்காக இந்த அரசு உருவாக்கப்படவில்லை. இந்த அரசை கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக அரசு உடன் ஒப்பிட முடியாது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்